அப்துல் மாலிக் அல்-ஹவுதி, அமைப்பின் யுத்திகள், கொள்கைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முடிவுகளை எடுக்கும் தலைவர். பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி சனா மற்றும் ஹௌதியின் பிற பகுதிகளில் மக்களின் குடிமை பிரச்னைகளை தீர்க்கும் பொறுப்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போரில் முன்னணி வகிக்கும் தலைவர் அல்ல என்றாலும், இவரது மறைவு அமைப்புக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த வியாழன் (ஆகஸ்ட் 27) அன்று, சனாவின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான கிராமத்தில் ஹௌதி தலைவர்கள் சந்திப்பு நடத்தியபோது இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.
அவரது இறப்பைத் தொடர்ந்து துணை பிரதமர் முத்தஹம்மத் அஹ்மத் மிஃப்தா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.