எஸ்சிஓ மாநாட்டு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுத்தது ஏன்? காங்கிரஸ் எழுப்பும் கேள்விகள் என்ன?

Share

 அமைச்சர் ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ- SCO) கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், எஸ்சிஓவின் சில உறுப்பு நாடுகளுக்கு இடையே சில விஷயங்களில் ஒருமித்த கருத்து இல்லாததால் கூட்டு அறிக்கை வெளியிடப்படவில்லை என்றார்.

“பயங்கரவாதம் தொடர்பாக எங்களுக்கு சில கவலைகள் இருந்தன, அவற்றை அந்த ஆவணத்தில் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் ஒரு நாடு அதற்கு ஆட்சேபனை தெரிவித்தது. இதன் காரணமாக அந்த அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இருப்பினும், கூட்டு அறிக்கையில் பஹல்காம் பற்றி குறிப்பிடாததற்காக பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மீது காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com