முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட அந்த மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் அவர்கள் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த ராம்ராஜ் (வயது 36), கஜேந்திரன் (வயது 62), வேணுகோபால் (வயது 46) என தெரிய வந்தது. அந்த மூன்று பேரும் திருவண்ணாமலை அருகிலுள்ள கீழ் முருங்கை கிராமத்தை சேர்ந்த மணி என்பவரிடம் இருந்துதான் இந்த எறும்பு தின்னியை பெற்று விற்க முயற்சித்ததாக விசாரணையில் தெரிய வந்தது. அதன் பிறகு முக்கிய குற்றவாளியான திருவண்ணாமலை கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்த மணி என்பவரை வலை வீசி தேடி வந்தனர் வனத்துறையினர். இந்த நிலையில் தற்போது அவரையும் அவருடன் தொடர்புடைய இரண்டு பேரையும் கைது செய்து கோர்ட்டில் வனத்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
எறும்பு திண்ணி கடத்தல்; திரைப்பட பாணியில் களமிறங்கிய காவல்துறை… கூண்டோடு கைது செய்யப்பட்ட கும்பல்! | Indian pangolin smuggling police arrested
Share