“எந்த நடிகருக்கும் ‘ரெட் கார்டு’ வழங்கவில்லை” – மறுப்பு தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம்

Share

தமிழ் சினிமா, சிம்பு, விஷால், யோகி பாபு, கோலிவுட், தயாரிப்பாளர் சங்கம்

பட மூலாதாரம், SILAMBARASAN

முன்னணி நடிகர்களான சிம்பு, விஷால், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, மற்றும் அதர்வா உள்ளிட்ட 5 நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு அளித்ததாக தகவல்கள் வெளியாகி தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அத்தகவல் உண்மை இல்லை என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி விளக்கமளித்துள்ளார்.

நேற்று (ஜூன் 18) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அதில், தயாரிப்பளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் வழங்காத நடிகர்கள், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல தரப்பில் முறையாக பட்டியல் எடுத்து, அந்த நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை (Red Card) என முடிவெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

முன்னனி நடிகர்களான சிம்பு, விஷால், எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, மற்றும் அதர்வா உள்ளிட்ட நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக ரெட் கார்டு வழங்கியது எனச் செய்திகள் வெளியாகின.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com