டெல்லியில் நடைபெற்ற இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்ற டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் (Mia Blichfeldt), “போட்டிகள் நடத்தப்பட்ட இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானம் மோசமான நிலையில் இருந்தது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
ஜனவரி 14 முதல் 19 வரை டெல்லியிலுள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது.
இதில், முதல் சுற்றில் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றில் சீனாவின் வாங் ஸி யீ-யிடம் (Wang Zhi Yi) 21-13 16-21 8-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தாயகம் திரும்பிய மியா பிளிச்ஃபெல்ட் இன்ஸ்டாகிராமில், “இந்தியாவில் நீண்ட மற்றும் மன அழுத்தமான வாரத்துக்குப் பிறகு இறுதியாக வீட்டுக்கு வந்துவிட்டேன். இரண்டு வருடங்களில் இப்போது இந்தியாவின் ஓபன் 750 போட்டியின்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகியிருக்கிறது.