ஊட்டி: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு; தாராளமாக நுழையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் | Ooty banned plastic products freely entering

Share

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் அமலில் உள்ளன.

பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக தடை நீடித்து வரும் நிலையில், பிளாஸ்டிக் டம்ளர், கரண்டி, கத்தி, முள் கரண்டி, உறிஞ்சு குழல், தட்டு, பேப்பர் கப், பேப்பர் டம்ளர் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு

மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்களில் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களைப் பயன்படுத்த, விற்பனை செய்ய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து அபராதம் விதித்து வந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com