உஸ்மான் கவாஜா: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய வீரர் | Australian cricketer Usman Khawaja has announced his retirement from cricket.

Share

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா (39), சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லிம் வீரர் ஆவார். கடந்த 2011-ம் ஆண்டில் முதல்முறையாக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 87 டெஸ்ட், 40 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 8,001 ரன்கள் எடுத்துள்ளார்.

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக கவாஜா பங்காற்றினார். அந்தக் காலகட்டத்தில் மட்டும் 17 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள், 7 அரைசதங்களுடன் 1,621 ரன்கள் குவித்தார்.

உஸ்மான் கவாஜா

உஸ்மான் கவாஜா

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவருடைய டெஸ்ட் பேட்டிங் சராசரி 25.93 மற்றும் 36.11 எனக் கவனம் ஈர்க்கவில்லை. நடந்துவரும் ஆஷஸ் தொடரில் கூட 5 இன்னிங்ஸ்களில் வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்தச் சூழலில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், “ஆஷஸ் தொடரில் 5வது டெஸ்டில் கவாஜா ஓய்வை அறிவிக்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com