உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரில், ஈட்டி எறிதல் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதலில் நடந்த தகுதிச் சுற்றில் ஈட்டியை 80 மீட்டருக்கும் அதிகமாக எறிந்து, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதேபோல பாகிஸ்தானின் அர்ஷாத் நதீமும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவிற்கும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாக செயல்பட்டு 92.97 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கம் வென்றார். 89.45 மீட்டருக்கு வீசிய நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.