உலக செஸ் சாம்பியன்ஷிப்: 3-வது சுற்றில் குகேஷ் பதிலடி! | World Chess Championship Gukesh outplays Liren on time in Rd3 for first win

Share

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதிலடி தரும் வகையில், இந்தியாவின் குகேஷ் மூன்றாவது சுற்றில் வென்றார். தற்போது அவரும், டிங் லிரெனும் தலா 1.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளனர்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்திருந்தது.

இந்நிலையில், புதன்கிழமை 3-வது சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் வெள்ளை காய்களுடனும், டிங் லிரென் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இதில் குகேஷ் 37-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். 3 சுற்றுகளின் முடிவில் குகேஷ், டிங் லிரென் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளனர். குகேஷ் கூறும்போது, “வெற்றி பெற்றதை சிறப்பாக உணர்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக எனது ஆட்டம் மகிழ்ச்சியாக இருந்தது. 3-வது சுற்றில் எனது ஆட்டம் மேலும் சிறப்பாக இருந்தது, போர்டில் நான் நன்றாக உணர்கிறேன். 3-வது சுற்றில், டிங் லிரெனை விஞ்ச முடிந்தது. இதுபோன்ற நிலைமை எப்போதும் நன்றாகவே இருக்கும்” என்றார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com