உத்தரப்பிரதேசத்தில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது – போலீசுக்கு சந்தேகம் ஏற்படுத்திய சிறிய விஷயம் என்ன?

Share

போலி ஐ ஏ எஸ் அதிகாரி

பட மூலாதாரம், LucknowPolice

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த புதன்கிழமை இரவு 10:30 மணியளவில், லக்னோவின் வஜீர்கஞ்ச் காவல் நிலைய பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்த காவல் நிலைய அதிகாரி (எஸ்.எச்.ஓ) ராகேஷ் திரிபாதி, ஒரு போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பிடிப்பார் என்று நினைத்து பார்க்கவில்லை.

அது ஒரு வழக்கமான சோதனை. ராகேஷ் திரிபாதி ஒரு ஃபார்ச்சூனர் காரை நிறுத்தியபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் தனது விசிட்டிங் கார்டை நீட்டினார்.

அதில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப இயக்குநர் என்று எழுதப்பட்டிருந்தது.

“நான் காரை நிறுத்தியபோது, பின்னால் அமர்ந்திருந்தவர் மிரட்டும் தொனியில், ‘நீங்கள் யாருடைய காரை நிறுத்தினீர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டு, உடனடியாக ஒரு விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்தார். அதில் அசோக சக்கரம் இருந்தது” என்கிறார் ராகேஷ் திரிபாதி.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com