நாவின் சுவைக்கென பல உணவு வகைகள் இருந்தாலும், பிரியாணியின் ருசியே தனிதான். பார்ட்டி, ட்ரீட் என்றாலே பிரியாணி என்று சொல்லும் அளவுக்கு கொண்டாடப்படும் உணவாக இது உள்ளது. பக்கெட் பிரியாணி, ஒரு கிலோ பிரியாணி, நள்ளிரவு பிரியாணி என பல விதங்களில் கிடைக்கிறது.
இதுதவிர விளம்பர உத்திக்காக, ஹோட்டல்கள் சார்பில் பிரியாணி சாப்பிடும் போட்டிகள் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு யார் அதிக பிரியாணி சாப்பிடுகிறார்களோ அவருக்கு பரிசுத் தொகை என்றெல்லாம் ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கிறார்கள். ஆபத்தை உணராமல் ஒருகை பார்த்துவிடுவோம் என்று பலரும் போட்டிபோட்டுக் கொண்டு வயிறுமுட்ட சுவைக்கின்றனர்.
இவ்வாறு திடீரென ஒரே நேரத்தில் அளவுக்கதிகமாக உணவு உட்கொள்வது உடலுக்கு நல்லத்தல்ல, ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். உணவுப் போட்டிகளில் அதிக உணவு சாப்பிடுவது குறித்து, சென்னையைச் சேர்ந்த இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் எல். ஆனந்திடம் கேட்டோம்…