இஸ்ரேல் இரானை வீழ்த்தினால் இந்தியாவை அது எப்படி பாதிக்கும்?

Share

அமெரிக்கா, இரான், இஸ்ரேல், முக்கியச் செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு வரை, அதாவது 1947 ஆகஸ்ட் வரை, இந்தியாவும் இரானும் 905 கி.மீ நீள எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டிருந்தன. பிரிவினைக்குப் பிறகு அந்த எல்லை பாகிஸ்தானுடனான எல்லையாக இருக்கிறது. இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையேயான உறவு, மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றில் மிகவும் ஆழமானதாக உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இவ்விரு நாடுகளுக்குமான ரஜ்ஜீய ரீதியிலான உறவு 1950 மார்ச் 15-ல் ஆரம்பமானது. ஆனால் 1979-ஆம் ஆண்டு இரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு அனைத்தும் வேகமாக மாறின.

1978-ஆம் ஆண்டு துவங்கி 1993-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் இவ்விரு நாட்டுப் பிரதமர்கள், அதிபர்கள் பரஸ்பர நாடுகளுக்கு வருகை புரியவில்லை.

1993 செப்டம்பரில், அன்றைய இந்திய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் இரானுக்குச் சென்றார். ஒரு வருடத்திற்கு முன்புதான், அதாவது 1992-ல், இஸ்ரேலுடனான உறவை மேம்படுத்த அவர் விரும்பினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com