இல்லாத ஊருக்கு சிறப்பு பேருந்து, பாேலீஸ் பாதுகாப்பு, வருவாய் அலுவலர் தந்த பாஸ் – சோக காட்சிகள்

Share

கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி வயநாட்டின் சூரல்மலை பகுதியில் வரலாறு காணாத ஊருள்பொட்டல் – நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் புஞ்சிறிமட்டம், முண்டகை, சூரல்மலை என மூன்று கிராமங்கள் இயற்கையின் கோரத்திற்கு இறையாகின.

அந்த கிராமங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான கல்லறை புத்துமலை பகுதியில் அரசு அமைத்துள்ளது.

இந்த காேர சம்பவத்திற்கு பிறகு புஞ்சிறிமட்டம், முண்டகை, சூரல்மலை ஆகிய பகுதிகள் மக்கள் வாழத் தகுதியில்லாத இடம் என கேரள அரசு அறிவித்திருந்தநிலையில், இல்லாத ஊருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

புத்துமலை பகுதயில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்திற்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

வருவாய் அலுவலரிடம் பாஸ் பெற்று, பாேலீஸார் அனுமதித்த பிறகு தான் இந்த கிராமங்களை சென்று பார்வையிட மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நுாற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தி, ஆயிரக்கணக்கான உயிர் பலி வாங்கிய பாறைகள் சூரல்மலை ஆற்றில் கிடக்கின்றன.

பாறைகள் ஒவ்வொன்றின் எடையும், அளவும் வீடுகளின் முன் பார்க்கும் பாேது வீடுகளைவிட பெரிதாக தெரிகிறது.

இந்த துயர சம்பவத்தின் போது வீடுகளின் மீது அப்பிய சேர்கூட காய்ந்து ஓவியமாய் காட்சியளித்தாலும், இது மனிதர்கள் வாழ தகுதியில்லாத இடமாகவே இருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com