இறால் ரோஸ்ட், நெய்ச்சோறு, சிக்கன் கேக்… காரைக்குடியை கமகமக்க வைத்த அவள் சமையல் சூப்பர் ஸ்டார்..! | Aval Vikatan samayal superstar contest in sivagangai Karaikudi

Share

அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2 விழா, காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள கோல்டன் சிங்கார் அரங்கத்தில் இன்று காலை தொடங்கியது. விளம்பரதாரர்கள் முன்னிலையில், இந்நிகழ்ச்சியின் ஜட்ஜும் பிரபல செஃபுமான தீனா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2

அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2

சிறுதானிய அவல் பிரைட் ரைஸ், சிறுதானிய இனிப்பு அவல், சோயா ஸ்டஃப்டு கோலா உருண்டை, கவுனி அரிசி கஞ்சி, வெந்தய லேகியம், நெய்ச்சோறு, சிக்கன் கேக், பேரீச்சம் பழ அல்வா, ராகி கிச்சடி, ராகி, கேக்பூசணி அல்வா, கிரீன் சிக்கன், வெற்றிலை லட்டு, உலர் பழங்கால் ஸ்நாக்ஸ், கொரியன் இறால் ரோஸ்ட், ஆப்பிள் பேடா, வெஜிடபிள் தம் சேமியா, சுரக்காய் கீர், ராகி இடியப்பம் என செட்டிநாடு உணவுகள் மட்டுமின்றி உள்நாடு, வெளிநாட்டு உணவுகள் என்று செய்து கொண்டு வந்திருந்தார்கள்.

இவைகளின் தரம், சுவை, செய்முறையை பார்த்து ருசித்து மதிப்பெண் வழங்கினார் செஃப் தீனா. இவர்களிலிருந்து 10 பேர் அடுத்த கட்ட நேரடி சமையல் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களிலிருந்து 3 சிறந்த போட்டியாளர்கள் சென்னையில் நடைபெறும் இறுதி போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com