இரான் வெற்றியை அறிவித்த காமனெயி – அரபு ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

Share

இரான், இஸ்ரேல், அமெரிக்கா, போர், மத்திய கிழக்கு, டிரம்ப், காமனெயி

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, ஜூன் 26ம் தேதியன்று வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட காணொளி

இரான் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, ஜூன் 26ம் தேதியன்று வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட காணொளியில், இரானின் அணுசக்தி நிலைகளை தாக்கியதன் மூலம் அமெரிக்கா ‘எதையுமே சாதிக்கவில்லை’ எனக் கூறியிருந்தார்.

“நடந்தவற்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகைப்படுத்தியுள்ளார். அவர் பேசுவதை கேட்பவர்களுக்கு அவர் உண்மையை திரிக்கிறார் என்பது புரியும்” என்று தெரிவித்தார்.

காமனெயியின் கருத்துக்கு டிரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார். அவர் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், “ஆயதுல்லா அலி காமனெயி, இஸ்ரேல் உடனான போரை வென்றுவிட்டேன் என முட்டாள்தனமாக ஏன் சொல்கிறார்? இந்தக் கூற்று பொய் என அவருக்குத் தெரியும். அவர் பொய் சொல்லக்கூடாது.” என்று தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு பேசிய இரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி இரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், அதிபர் டிரம்ப் இரானின் அதி உயர் தலைவர் காமனெயி பற்றி அவமதிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தொனியில் பேசுவதை கைவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com