இரான் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக டிரம்ப் அறிவிப்பு – இரான் கூறுவது என்ன?

Share

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு ‘முழுமையான தீர்வு’ காண்பது குறித்து இரானுடன் ‘பயனுள்ள பேச்சுவார்த்தை’ நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

ட்ரூத் சோஷியல் தளத்தில், வெளியிட்ட ஒரு பதிவில், “அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே, கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு முழுமையான தீர்வு காண்பது குறித்து, மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடைபெற்றுள்ளன” என்று கூறியுள்ளார் டிரம்ப் .

மேலும் “இந்த வாரம் முழுவதும் தொடரவுள்ள, ஆழமான, விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான இந்த உரையாடல்களின் போக்கு மற்றும் தொனியின் அடிப்படையில், இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படக்கூடிய எந்தவொரு ராணுவத் தாக்குதலையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நான் போர் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த உத்தரவு, தற்போது நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் விவாதங்களின் வெற்றியின் அடிப்படையில் அமையும்” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி இரான் வெளியுறவு அமைச்சகம், ” அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய கூற்றை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com