இரானில் இப்போது என்ன நிலவரம்? அயதுல்லா அலி காமனெயி ஆட்சி சிக்கலில் உள்ளதா?

Share

இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலுடனான மோதலின்போது, இரானில் உள்ள ஒரு ரகசிய பதுங்கு குழியில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்த பிறகு, 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெயி, இப்போது ஏற்பட்ட சண்டை நிறுத்தத்தைப் பயன்படுத்தி வெளியே வர விரும்பலாம்.

இஸ்ரேலால் அவர் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில், அவர் எங்கோ பதுங்கியிருக்கிறார் என்றும், யாருடனும் தொடர்பு கொள்ளாமல் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் நம்பப்படுகிறது. அரசின் உயர் அதிகாரிகளுக்கே அவரை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் எமிர் மத்தியஸ்தம் செய்த பலவீனமான சண்டை நிறுத்தம் இருந்தபோதிலும், அவர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனக் கூறப்பட்டது.

இரானின் உச்ச தலைவரை கொல்ல வேண்டாம் என்று டிரம்ப் இஸ்ரேலிடம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதைப் பற்றி எந்த உறுதியான பதிலும் அளிக்கவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com