இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை – வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

Share

தோல்வியை ஒப்புக்கொண்ட இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

பட மூலாதாரம், ANI

இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை ஏற்று, காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“மக்களின் ஆணையை நான் மதிக்கிறேன். இமாச்சல பிரதேசத்தில் ஐந்து ஆண்டுகள் சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கும் ஒவ்வொரு நகர்விலும் அவர்களுடைய ஆதரவைப் பெற்றதற்கும் இமாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

“எதிர்க்கட்சிக்கு அதிகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உறுதிப்படும் தருவாயில் உள்ளன. அவர்களை நான் வாழ்த்துகிறேன். இமாச்சல பிரதேச மக்களுக்கும் குறிப்பாக வாக்காளர்கள் தேர்தல் பணியில் மிகவும் ஒத்துழைப்பு வழங்கியதற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தச் சம்பவமும் நடக்காமல், மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இந்த முறை இமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த மாநிலத்தின் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இயற்கையாகவே அந்தப் பெருமை மரியாதைக்குரிய மோதிஜியையே சேரும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com