இந்த வாரம் உகந்த தேதி எது? துலாம் முதல் மீனம் வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்

Share

துலாம் ராசி அன்பர்களே!

வருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் கடன் ஏற்படக் கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடை பெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

துலாம் ராசி

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 3,9

அதிர்ஷ்ட எண்கள்: 2,6

சந்திராஷ்டமம்: 6 மாலை முதல் 7,8 இரவு வரை

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடியிளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

விருச்சிகராசி அன்பர்களே!

பணவரவுக்குக் குறைவில்லை. அதேசமயம் சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்கவேண்டாம். திருப்பிக் கொடுப் பதற்கு சற்று கடினமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பால்ய நண்பர் கள் உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை

விருச்சிகம்

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 3,6

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,7

சந்திராஷ்டமம்: 8 இரவு முதல் 9 முழுவதும்

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே

தனுசுராசி அன்பர்களே!

பண வரவுக்குக் குறைவில்லை. தேவையற்ற செலவுகள் இருக்காது. திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும்,

அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

தனுசு ராசி

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். அக்கம்பக்கத்தில் இருப் பவர்களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 4,7

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்

குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்

மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்

கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.

மகரராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனுக்குடன் சரியாகும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவு படுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம்.

மகரம்

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 4,7

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்

பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை

என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி

அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

கும்பராசி அன்பர்களே!

வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.

வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறு மையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய அளவு பணவசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பதுடன், சக பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 4,8

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,5

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,

மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த

வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,

உள்ளத்தி னுள்ளே உளன்.

மீனராசி அன்பர்களே!

 பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரும்.

அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும்.

வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

மீனம்

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 5,8

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,

என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்

ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து

அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com