இந்தோனீசியாவில் உள்ள இந்தக் குகை மெக்காவுக்கு செல்லும் ரகசிய சுரங்கப் பாதையா?
இந்த மறைவான பாதை மூலம் மெக்கா செல்லும் நம்பிக்கையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் இந்தக் குகைக்கு வருகின்றனர்.
தெய்வீக சக்தியால் ஷேக் அப்துல் முஹ்யி போன்ற புனிதர்கள் இந்த வழியே மெக்கா சென்றதாக இஸ்லாமிய ஞானிகள் கூறுகின்றனர். அவர், 17ஆம் நூற்றாண்டில் மேற்கு ஜாவாவில் இஸ்லாமை பரப்பிய அறிஞராவார்.
இந்தக் கற்களில் தலை பொருந்தினால் நீங்கள் ஹஜ் செல்லலாம் என மற்றொரு ஞானி கூறுகிறார்.
இங்கு சொட்டும் நீரை மெக்காவின் ஜம்ஜம் கிணற்றுப் புனித நீராக மக்கள் கருதுகின்றனர். சௌதி – இந்தோனீசியா இடையே 8,000 கி.மீ. தூரம் உள்ளது. ஆனாலும் ஏன் இன்னும் இந்த நம்பிக்கை நிலவுகிறது?
இதன் பின்னணியில் புனையப்பட்டுள்ள கதை எதுவாக இருந்தாலும், இந்தக் குகை பலராலும் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு