முன்னதாக கடந்த செவ்வாய் அன்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) அசாதுதீன் ஓவைசி, உள்நாட்டு போட்டிகளில் நிலையாக விளையாடியபோதும் ஏன் சர்ஃபராஸ் கான் இந்தியா ஏ அணியில் இடம்பெறவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், சர்ஃபராஸ் கானுக்காக வருந்துவதாக தெரிவித்ததுடன், “அவரை A அணியில் சேர்க்காவிட்டால் எங்கே சென்று தனது திறமைகளை, முன்னேற்றத்தை நிரூபிப்பார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாததே விவாதங்களை எழுப்பியது. தற்போது A அணியிலும் சேர்த்துக்கொள்ளப்படாதது கடும் அரசியல் விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
Sarfaraz Khan நீக்கம் – அஜித் அகர்கர் விளக்கம்?
இந்த விவகாரத்தில் இந்தியா டுடே நிறுவனம் கூறுவதன்படி, சர்ஃபராஸ் கான் காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை என கடந்த மாதம் விளக்கம் அளித்திருக்கிறார் தேர்வுக்குழுவின் தலைவர் அஜித் அகர்கர். தொடையில் உள்ள காயம் காரணமாக துலீப் கோப்பை மற்றும் இரானி கோப்பையிலும் அவர் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் சர்ஃபராஸ் கான் வருகின்ற ரஞ்சி கோப்பையில் தன்னை நிரூபிக்க முனைப்புடன் இருக்கிறார். அவர் 56 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இன்னிங் 65.19 ரன்கள் ஆவெரேஜ் உடன் நிலையான பங்களிப்பைச் செலுத்தும் வீரராக இருந்து வருகிறார்!