“இந்திய கால்பந்து நிர்வாகம் இனி பொறுப்புகளை நிறைவேற்றும் நிலையில் இல்லை”- கால்பந்து வீரர்கள்| “Indian football administration is no longer in a position to fulfill its responsibilities,” say the footballers

Share

இந்திய கால்பந்தை FIFA காப்பாற்ற வேண்டும் என்று கால்பந்து வீரர்கள் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர்.

கடந்தாண்டு செப்டம்பரிலேயே தொடங்க வேண்டிய ISL கால்பந்து தொடர், போதிய நிதி இல்லாததால் இன்னும் நடத்தப்படவில்லை.

அடுத்த ஆண்டு தொடங்கிவிட்டதால் இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குர்ப்ரீத் சிங் சந்து, சுனில் சேத்ரி உள்ளிட்ட இந்திய கால்பந்து வீரர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்திய கால்பந்து வீரர்கள்

இந்திய கால்பந்து வீரர்கள்

அதாவது, ” இன்று நாங்கள் ஒரு முக்கிய வேண்டுகோளை முன்வைக்கிறோம். இந்திய கால்பந்து நிர்வாகம் இனி பொறுப்புகளை நிறைவேற்றும் நிலையில் இல்லை.

அதனால் இந்திய கால்பந்தை FIFA காப்பாற்ற வேண்டும். இந்திய கால்பந்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க FIFA தலையிட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுக்கு கால்பந்து விளையாட வேண்டும் என்பதுதான் ஆசை. தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்” என்று வீரர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com