இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து

Share

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ்(பாமக நிறுவன தலைவர்): இந்திய விடுதலைப்  போராட்ட வீரரும், பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணுவின்  98வது பிறந்த நாளில் அவர் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று  வாழ்த்துகிறேன்.

கனிமொழி எம்பி (திமுக துணை பொது செயலாளர்): சமூகத் தொண்டை வாழ்வாகக் கொண்டவர்; பொதுவுடைமை சித்தாந்தத்தின் சிகரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் இன்னும் ஆண்டுகள் பல அவரது சமூகப் பணி தொடர விழைகிறேன்.

திருநாவுக்கரசர் எம்பி(முன்னாள் காங்கிரஸ் தலைவர்): இந்திய பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவரும், இந்தியத் திருநாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், நேர்மை, ஒழுக்கம், சமத்துவம், சமூக நீதி, மக்கள் நலன் ஆகியனவற்றின் எடுத்துக் காட்டாய் திகழ்பவரும், இக்காலம் மற்றும் எதிர்காலத்தின் அரசியல் வாதிகளுக்கு இலக்கணமாய், எடுத்துக்காட்டாய்  வாழ்ந்து வருபவருமான ரா.நல்லக்கண்ணுவின் பிறந்த நாளையொட்டி அவர் நல்ல உடல் நலத்தோடு பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இதே போல தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நல்லக்கண்ணுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com