இந்தியா – பாகிஸ்தான் மோதலில் அதிக இழப்பு யாருக்கு? செயற்கைக்கோள் படங்கள் கூறுவது என்ன?

Share

இந்தியாவும் பாகிஸ்தானும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புக்கொண்டன

  • எழுதியவர், அன்ஷுல் சிங்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஒன்பது இடங்களில் உள்ள ‘பயங்கரவாத முகாம்களை’ தாக்கியதாக இந்திய ராணுவம் கூறுகிறது.

இந்த ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோஃபியா குரேஷி, “கடந்த மூன்று தசாப்தங்களாக பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அதிகரித்துள்ளன. இவற்றில் ஆள் சேர்ப்பு, பயிற்சியளிப்பது மற்றும் ஏவுதளங்கள் ஆகியவை அடங்கும். அவை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் பரவியுள்ளன” என்று கூறியிருந்தார்.

இது இந்தியாவின் ‘போர் நடவடிக்கை’ என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தகுந்த பதிலடி கொடுக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றார்.

நான்கு நாட்கள் எதிரும் புதிருமாக இருந்த இரு நாடுகளும், பிறகு சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com