இந்தியா நம்பர் ஒன் டி20 அணி என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும்; வங்காளதேச பயிற்சியாளர் பேச்சு | Bangladesh coach Phil Simmons syas match hype because of india is world number one t20 team

Share

இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 வடிவில் நடைபெற்று வருகிறது.

ஏ, பி என இரண்டு குழுக்களாக 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இரு குழுக்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

இந்தச் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

ஆனால், சூப்பர் 4 சுற்றில் தலா மூன்று போட்டிகளில் ஆடும் இந்த நான்கு அணிகள் குறைந்தபட்சம் 2 போட்டியில் வென்றால்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

Asia Cup - ஆசிய கோப்பை

Asia Cup – ஆசிய கோப்பை

இச்சுற்றின் முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் தோற்ற இலங்கையும், இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தானும் இன்று (செப்டம்பர் 23) மோதுகின்றன.

இப்போட்டியில் தோற்கும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கும்.

மறுமுனையில், வங்காளதேச அணியும், இந்திய அணியும் நாளை (செப்டம்பர் 24) மோதவிருக்கின்றன.

இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் தனது இடத்தைக் கிட்டத்தட்ட உறுதி செய்துவிடும்.

இந்த நிலையில், வங்காளதேச அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் (முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்), இந்தியாவை வீழ்த்தக்கூடிய திறன் எல்லா அணிகளுக்கும் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com