அதையடுத்து, 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. முதல் ஒவேரிலேயே குசல் மெண்டிஸை ஹர்திக் டக் அவுட் ஆக்கினாலும் அதன்பின்னர்தான் ஆட்டம் இன்னும் சூடுபிடித்தது.
பதும் நிசங்கா – குசல் பெரேரா கூட்டணி இந்தியாவின் பவுலிங்கை சிதறடித்து பார்ட்னர்ஷிப்பில் சென்சுரி போட்டது.

இருவரும் அரைசதம் கடந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த வேளையில் குசல் பெரேரா விக்கெட்டை எடுத்து இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் வருண் சக்ரவர்த்தி.
அடுத்துவந்த இலங்கை கேப்டனும், கமிந்து மெண்டிஸும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினாலும் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த பதும் நிசங்காவுடன் கைகோர்த்தார் டசுன் ஷானகா.
இந்திய பவுலரின் எவரிடமும் சிக்காத பதும் நிசங்கா வெற்றிகரமாக சதமடிக்க, கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.