இந்தியாவில் ஐபோன் வேண்டாம் என கூறும் டிரம்ப் – இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படுமா?

Share

ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கச் சொல்லும் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதை விரும்பவில்லை என ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அதே சமயம், உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்றுவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது மற்றும் புவிசார் அரசியல் ரீதியாக சிக்கலானது என தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு மூத்த ஆலோசகர் பிபிசி தமிழிடம் பேசும்போது, பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கு தேவையான திறமையான தொழிலாளர் படை அமெரிக்காவில் இல்லை, குறிப்பாக ரோபோட்டிக்ஸ் மற்றும் கிளீன்ரூம் பொறியியல் துறையில். இதனால் இடமாற்றம் செய்வது நடைமுறையில் சாத்தியமற்றதும் நிதி ரீதியாக அர்த்தமற்றதும் ஆகும் என்றார்.

உலகளாவிய விநியோகச் சங்கிலியின் தற்போதைய போக்கு இந்தியாவை நோக்கி இருப்பது வெறும் போக்கல்ல, இது நீண்டகால தவிர்க்க முடியாத நிலை என நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com