இந்தியாவின் செயலுக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்ட நடுவர்?; யுஏஇ-க்கு எதிரான போட்டி தாமதமாக காரணம் என்ன?

Share

ஆண்டி பைக்ராஃப்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகிறது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் மற்றும் கேப்டனிடம் ஐசிசி (இந்திய கிரிக்கெட் கவுன்சில்) போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கூறியதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஐசிசி இதுவரை இது குறித்து எந்த செய்தியும் குறிப்பிடவில்லை.

ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, இரு அணிகளின் கேப்டன்களும் டாஸுக்காக மைதானத்திற்கு வந்தபோது, போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் கைகுலுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் அணி குற்றம் சாட்டியது.

இது குறித்து ஐசிசி-யிடம் புகார் அளித்த பாகிஸ்தான், போட்டி நடுவர் நீக்கப்படாவிட்டால் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாகவும் கூறியது.

“செப்டம்பர் 14 அன்று நடந்த சம்பவம் ஒரு தவறான புரிதலால் ஏற்பட்டது, அதற்காக ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com