இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
இந்தத் தொடரை இந்தியா சமன் செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது சிராஜ்.
கடைசி நாள் வரை நீடித்த இந்தப் போட்டியில், சிராஜ் இரண்டாவது இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. சிறப்பாக விளையாடிய முகமது சிராஜை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் போட்டிக்கு செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் சிராஜ், ” இந்தத் தொடரை நான் மிகவும் உயர்வாக மதிப்பிடுவேன். இந்தத் தொடரில் எல்லோரும், குறிப்பாக இளைஞர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.
கடவுள் எனக்கு இந்தத் தொடரில் சிறந்தத் திட்டங்களை வைத்திருந்தார் என்று நினைக்கிறேன்” என்று நெகிழ்வாகப் பேசியிருக்கிறார்.