இதயத்தில் பொருத்ப்பட்ட stent நகருமா, வெளியே எடுக்க வாய்ப்பிருக்கிறதா? | Can a stent placed in the heart move, and is it possible to have it removed?

Share

ஸ்டென்ட்டுகளில் லேட்டஸ்ட்டாக, தானாக உறிஞ்சப்படும், “பயோ அப்சார்பபிள்’ ஸ்டென்ட்டுகள் (bioabsorbable stent) வந்துள்ளன. அந்த வகை ஸ்டென்ட்டை உள்ளே பொருத்திவிட்டால், அது 6 முதல் 8 மாத காலத்திற்குள் உள்ளே உறிஞ்சப்பட்டுவிடும்.

ஆனால், இந்த வகை ஸ்டென்ட்டில் சில சிக்கல்கள் இருப்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் இதைப் பரிந்துரைப்பதில்லை. இது எதிர்பார்த்த அளவு ரிசல்ட்டையும் கொடுப்பதில்லை.

தற்போது புழக்கத்தில் உள்ள ஸ்டென்ட் பாதுகாப்பானது.

தற்போது புழக்கத்தில் உள்ள ஸ்டென்ட் பாதுகாப்பானது.

எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள ஸ்டென்ட் பாதுகாப்பானது. அது உடலால் ஏற்றுக்கொள்ளப்படுகிற உலோகம் என்பதால் பெரும்பாலும் பிரச்னைகளைத் தருவதில்லை. இதயத்தின் ரத்தக் குழாயில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட், நடப்பது, ஓடுவது, உடற்பயிற்சிகள் செய்வது போன்றவற்றால் நகர வாய்ப்பே இல்லை. பொதுவாக, ஸ்டென்ட்டை உள்ளே வைத்து, பலூன் மூலம் விரிவடையச் செய்து, ரத்தக் குழாயினுள் நன்கு பதியும்படி செய்வதால், அது நகர்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்கள், அது குறித்த அறியாமையில் பயம் கொள்ளத் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com