இடைநிலை ஆசிரியர் கோரிக்கையை ஏற்க வேண்டும்: அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

Share

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். 2018 ஏப்ரல் மாதமும், அதே ஆண்டில் டிசம்பர் மாதமும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  எதிர்கட்சியாக திமுக இருந்த போது இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். எனவே சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com