ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன் | australian open mens singles jannik sinner champion

Share

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியனும், இத்தாலி வீரருமான ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ் மோதினர். இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 6-3; 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஜிவேரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் உலகத் தரவரிசைகளில் முதல் இடத்தில் இருப்பவருமான ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com