ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின், பயிற்சியின்போது தலையில் பந்து பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவ நேரத்தில் பென் ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும், பந்து அவரது தலைக்கும் கழுத்துக்கும் இடையில் பட்டத்தில் உடனே மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவக் குழு ஓடி வந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. ஆனால் அங்கு சிகிச்சையின்போது பென் ஆஸ்டினின் உயிர் பிரிந்தது.
17 வயதேயாகும் பென் ஆஸ்டின் கிரிக்கெட் மட்டுமல்ல, கால்பந்து மற்றும் பிற விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. எந்த விளையாட்டானாலும் துறுதுறுவென திறமையோடு விளையாடுபவர் என அவரது கிரிக்கெட் கிளப்பினர் கூறுகின்றனர்.
பெர்ண்ட்ரீ கழி, மல்க்ராவ், ஈல்டன் பார்க் ஆகிய கிளப்புகளுடன் பல 18 வயதிற்குட்பட்ட மேட்ச்சை ஆடி கவனம் ஈர்த்திருக்கிறார். திறமைமிக்க விளையாட்டு வீரரை இழந்துவிட்ட அவரது கிரிக்கெட் கிளப்பினர், நண்பர்கள், குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.