ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 281 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்கைள சேர்த்தனர். தொடக்க வீரர் ஸாக் கிராலே 61 ரன்களும், ஒலி போப் 31 ரன்களும் எடுத்தனர். ஹேரி ப்ரூக் 32, பேர்ஸ்டோ 78 ரன்கள் எடுக்க, ஒருநாள் போட்டியை போன்று ரன்கள் சேர்த்த ஜோ ரூட் 116 ரன்கள் குவித்தார். 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது இங்கிலாந்துஅணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 141 ரன்களும், அலெக்ஸ் கேரி 66 ரன்களும், டிராவிஸ் ஹெட் 50 ரன்களும் எடுத்தனர். 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்கினர். இந்த முறை 273 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட், ஹேரி ப்ரூக் ஆகியோர் தலா 46 ரன்களும் கேப்டன் ஸ்டோக்ஸ் 43 ரன்களும் சேர்த்தனர்.
இதையும் படிங்க – தீவிர உடற்பயிற்சியில் விராட் கோலி… லைக்ஸை அள்ளும் வீடியோ
ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயோன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர். நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.