சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வுபெற்றிருந்தாலும் தற்போது நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கும் ஜடேஜாவை தேர்வு செய்யாதது, ஒருநாள் கிரிக்கெட்டில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
இந்த நிலையில், ஜடேஜா தேர்வாகாதது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருக்கும் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார், “இப்போதைக்கு இரண்டு இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வது சாத்தியமில்லை.
அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அணியில் இடங்களுக்கு சில போட்டிகள் இருக்கும். அதற்காக அவர் ரேடாரில் இல்லை என்பதாகாது.

அவர் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இருந்தார். ஏனெனில், அங்குள்ள பிட்ச் கண்டிஷன் காரணமாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்தோம்.
தற்போது அணியில் சமநிலையைச் செய்ய வாஷிங்க்டன் – குல்தீப் ஆகியோருடன் ஒருவரை மட்டுமே கொண்டுசெல்ல முடியும்.
ஆஸ்திரேலியாவில் இதற்கு மேல் கூடுதலாக நமக்கு ஒருவர் வேண்டும் என்று நினைக்கவில்லை. இது வெறும் மூன்று போட்டிகள் கொண்ட குறுகிய தொடர்.
எல்லோரையும் நீங்கள் கொண்டு செல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக தற்போது அவர் தேர்வாகவில்லை. அதைத்தாண்டி இதில் வேறெதுவும் இல்லை” என்று விளக்கினார்.

3 போட்டிகள் கொண்ட குறுகிய தொடருக்கு எல்லோரையும் கொண்டு செல்ல முடியாது அகர்கார் கூறுகிறார்.
அப்படியெனில், அடுத்து டிசம்பரில் தென்னாப்பிரிக்கா, ஜனவரியில் நியூசிலாந்து, ஜூலையில் இங்கிலாந்து என இந்தியாவின் அடுத்த மூன்று ஒருநாள் தொடர்களும் 3 போட்டிகள் கொண்ட குறுகிய தொடர்தான். எனவே, அதிலும் ஜடேஜா புறக்கணிப்படுவாரா?
ஜடேஜாவை தேர்வுசெய்யாதது குறித்து உங்களின் கருத்தை கமெண்ட்டில் பதிவிடவும்.