சென்னை:
‘ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை ஆளுநர்
மாளிகை முற்றுகையிடப்படும்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட
அறிக்கை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ‘ஒன்றிய
அரசு தலையிட்டு, ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என் ரவியை திரும்பப் பெற
வேண்டும் என வலியுறுத்தி 29ம் தேதி(நாளை) ஆளுநர் மாளிகை முற்றுகை இயக்கத்தை
அறிவித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை
உரிமைகள் அனுமதிக்கும் வகையில் ஆளுநரின் அதிகார அத்துமீறலை எதிர்த்து
நடைபெறும் இயக்கத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை நாளை முற்றுகை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
Share