இதில் அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். முள்முருங்கை பனியாரம், முருங்கை கீரை சட்னி, ஹார்டீன் இட்லி, பீட்ரூட் தோசை, நொதல் அல்வா, சுரைக்காய் நண்டு பிரட்டல், தேங்காய் பால் சாதம், முருங்கை கீரை இறால், நெல்லிகாய் சாதம், வத்தக்குழம்பு சாதம் என வகை வகையான சுவையான உணவுகளைச் செய்து எடுத்து வந்திருந்தனர். தாங்கள் கொண்டு வந்த டிஷ்ஷை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் டிஸ்ப்ளே செய்திருந்தனர் போட்டியாளர்கள். செஃப் தீனா, அந்த உணவுகளை டேஸ்ட் செய்தார்.

ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய உணவுகள், உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகள் தருகின்றன என்பதை அழகாக எடுத்து சொன்னார்கள். சமையல் கலை மட்டுமல்ல உடல் உறுதிக்கான ஆரம்ப புள்ளியும் அது தான், எனவே உண்ணும் உணவில் அக்கறை கொள்ள வேண்டும் என்றனர். இதில் சிறப்பாக செய்திருந்த பத்து பேரை ஃபைனலுக்கு தேர்வு செய்வதற்காக, போட்டியில் பங்கெடுத்தவர்களைத் தேர்ந்தெடுத்தார் செஃப் தீனா.