ஆப்கன் உடனான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க அழுத்தம்: தலிபானால் வந்த வினை | England to boycott Champions Trophy Afghanistan match Taliban rule

Share

லண்டன்: ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் கீழ் கல்வி உட்பட பெண்களுக்கான பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும், எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் அணி உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதனால் வரும் பிப்ரவரி 26-ம் தேதி அன்று லாகூரில் நடைபெற உள்ள குரூப் சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இங்கிலாந்து அணி விளையாடுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையை போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது அவர்களே சொல்லி இருந்தனர்.

பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாகவே அவர்களது செயல்பாடு இதுவரை இருந்து வருகிறது. பெண்கள் விளையாட கூட தடை பிறப்பித்துள்ளது. அண்மையில் கூட வீடுகளில் பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை விதித்தது.

இந்தச் சூழலில் தலிபான் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளை மனசாட்சியின்றி அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் உடனான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும் என சொல்லி சுமார் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு லேபர் கட்சியின் எம்.பி டோனியா, 160 எம்.பி-க்கள் வலியுறுத்தி உள்ள கடிதத்தை அனுப்பி உள்ளார். பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காரணத்துக்காக ஆப்கானிஸ்தான் உடன் இருநாடுகளுக்கு இடையிலான போட்டிகளில் விளையாடுவதை கடந்த காலங்களில் தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணி ஹைபிரிட் முறையில் பங்கேற்று விளையாடுகிறது. அதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com