ஆந்திரா மெஸ் பருப்புப் பொடி.. வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

Share

பருப்பு பொடி என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது ஆந்திரா மெஸ் பருப்பு பொடிதான். ஆந்திரா மெஸ்ஸுக்கு பலர் சாப்பிட செல்ல முக்கிய காரணம் அங்கு வழங்கப்படும் பருப்பு பொடிதான்.

நான்வெஜ் பிரியர்கள்கூட வெஜிடேரியன் மீல்ஸ் சாப்பிடுகையில் பருப்பு பொடியை விருப்பி சாப்பிடுவர். அந்த அளவிற்கு ருசியான பருப்பு பொடியை வீட்டிலேயே சுலமாக செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கடலெண்ணெய்/ நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு – 1 கப்

பொட்டுக்கடலை – 1 கப்

காய்ந்த மிளகாய் – 6

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு (தோலுடன்) – 12 பல்

கட்டிப் பெருங்காயம் – 1 சிறிய துண்டு

கறிவேப்பிலை – சிறிதளவு

கல்லுப்பு – சிறிதளவு

செய்முறை :

ஒரு கடாயில் கட்டிப்பெருங்காயத்தை பொன்னிறமாகும் வரை வறுக்கவும் பின்னர் காய்ந்த மிளகாயை சேர்த்து வறுக்கவும். பின்னர் அவ்விரண்டையும் தனியே எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் துவரம் பருப்பை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். அதன்பின்னர் பொட்டுக்கடலை சேர்த்து சிறிது நேரம் வறுத்த பின்னர் சீரகத்தை சேர்க்க வேண்டும். பின்னர் பருப்பை எடுத்து விட்டு அதே கடாயில் பூண்டும் கறிவேப்பிலையையும் சேர்த்து வறுக்கவும்.

பருப்பு பொடியை அரைக்கும் முறை :

பருப்பு பொடி நல்ல பக்குவத்தில் கிடைக்க அதை அரைப்பதற்கு ஒரு சில முறைகள் உள்ளன. அதை பின்பற்றி அரைத்தால் பொடியின் பக்குவம் மிகவும் நன்றாகவே இருக்கும்.

முதலில் வறுத்து வைத்துள்ள மிளகாய், கல்லுப்பு, பெருங்காயத்தை கரகரவென அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் இரண்டாவதாக வறுத்து வைத்த துவரம் பருப்பு, பொட்டுக் கடலை, சீரகத்தை செர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக வறுத்த கறிவேப்பிலையும் பூண்டையும் சேர்த்து நன்கு அரைத்தால் சுவையான பருப்பு பொடி தயார்.

Also Read : சட்னி அரைக்க டைம் இல்லையா..? இன்ஸ்டன்ட் சட்னி பொடியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.. உடனடி சட்னி தயார்.!

கூடுதல் குறிப்பு :

பருப்பு பொடியை அரைத்ததும் அதை ஒரு தட்டில் நன்றாக பரப்பி வைக்கவும், ஆறிய பின்னர் அதை ஒரு சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் அப்படியே இருக்கும். சாப்பிடும்போது சுடு சாதத்தில் சூடான உருக்கிய நெய் ஊற்றி சாப்பிட்டால் சுவை அப்படி இருக்கும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com