ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா – பாக். இன்று பலப்பரீட்சை | asian champions trophy hockey 2024

Share

ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது.

பாகிஸ்தான் அணியானது மலேசியா, கொரியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. அதேவேளையில் ஜப்பானை 2-1 என்ற கணக்கிலும் சீனாவை 5-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com