‘ஆகஸ்ட்’ மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail | Oil, Trump and India: Who Decides India’s Energy Policy?

Share

இவ்வளவு இறக்குமதிக்குக் காரணம், தடைக்கு முன்பே, குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்து வைத்துவிடலாம் என்பதுதான்.

2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அதற்கு முந்தைய மாதத்தை விட, 29 சதவிகிதம் குறைந்த அளவே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆக, அமெரிக்காவின் எச்சரிக்கைக்குப் பின், மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து வருகிறது இந்தியா.

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி

இப்போது ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே உறவு சரியில்லை.

இதனால், ஈரானில் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று ட்ரம்ப் கூறுகிறார்.

2022-ம் ஆண்டு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியதில் இருந்து, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக் கொண்டது இந்தியா.

இப்போது ஈரானில் இருந்து இந்தியா பெயரளவிற்கே எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது.

இதுவும் கூடாது என்கிறார் ட்ரம்ப்.

ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறது… அதற்கு இந்தியாவில் இருந்து செல்லும் பணம் உதவுகிறது என்று ட்ரம்ப் கூறுவது கூட ஒரு பேச்சுக்கு நியாயம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், இவருக்கும், ஈரானுக்கும் ஆகவில்லை என்பதால், இந்தியா அவர்களிடம் வர்த்தகம் செய்யக்கூடாது என்பதில் என்ன நியாயம்?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com