அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடி அரைசதம்: தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் அசத்தல்! | dewald brevis hits blistering half century in his test cricket debut

Share

புலவாயோ: தென் ஆப்பிரிக்க அணிக்காக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார் இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ்.

நடப்பு டெஸ்ட் உலக சாம்பியன் அணியான தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பவுமா, மார்க்ரம், ரபாடா போன்ற அனுபவ வீரர்கள் விளையாடவில்லை. இந்நிலையில், இளம் வீரர்களுக்கு அந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேஷவ் மஹராஜ் அணியை கேப்டன் செய்கிறார். இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் 22.3 ஓவர்களில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென் ஆப்பிரிக்க அணி.

அழுத்தம் நிறைந்த அந்த தருணத்தில் 6-வது பேட்ஸ்மேனாக தனது அறிமுகம் டெஸ்ட் போட்டியில் களம் கண்டார் 22 வயதான டெவால்ட் பிரெவிஸ். நிதானமாக இன்னிங்ஸை அவர் அணுகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது வழக்கமான அதிரடி பாணி ஆட்டத்தை அவர் ஆடினார். 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக அரைசதம் விளாசிய பேட்ஸ்மேன்களில் மூன்றாவது இடத்தை அவர் பிடித்தார்.

4 சிக்ஸர்கள் மற்றும் 3 ஃபோர்களை அவர் விளாசி இருந்தார். கடந்த மே மாத வாக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடிய அதே அதிரடியை தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸிலும் பிரெவிஸ் வெளிப்படுத்தினார். பிரிட்டோரியஸ் உடன் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

19 வயது வீரரான பிரிட்டோரியஸும் தனது அறிமுகம் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினார். 160 பந்துகளில் 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாளில் 390+ ரன்கள் எடுத்துள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com