அர்மேனியாவை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல் அணி

Share

எனினும் போர்ச்​சுகல் அணி அபார​மாக செயல்​பட்டு 9-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி தரப்​பில் ஜோவோ நெவ்ஸ் (30, 41 மற்​றும் 81-வது நிமிடங்​கள்), புருனோ பெர்​னாண்​டஸ் (45+3, 52 மற்​றும் 72-வது நிமிடங்​கள்) ஆகியோர் ஹாட்​ரிக் கோல் அடித்து அசத்​தினர்.

முன்​ன​தாக ரெனாடோ வெய்கா 7-வது நிமிடத்​தி​லும், கோன்​கலோ ரமோஸ் 28-வது நிமிடத்​தி​லும் தலா ஒரு கோல் அடித்​திருந்​தனர். ஆட்​டத்​தின் இறு​திப் பகு​தி​யில் 90+2-வது நிமிடத்​தில் பிரான்​சிஸ்கோ கான்​சி​காவோ கோல் அடித்​தார். அர்​மேனியா அணி சார்​பில் 18-வது நிமிடத்​தில் ஸ்பெர்ட்​சி​யன் ஒரு கோல் அடித்​தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com