அருப்புக்கோட்டை: குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகள் கொலை; கணவர் வெறிச்செயல்!

Share

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரவேலு. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் 5 மற்றும் 10 வயதில் (ஜெயதுர்கா, ஜெயலட்சுமி) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்று திரும்பி வந்த சுந்தரவேலு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் மனைவி பூங்கொடி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அம்மிக்கல் மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலையான பூங்கொடி

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாலுகா போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடயங்களை சேகரித்து உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி கண்ணன் நேரில் விசாரணை மேற்கொண்டதில் சுந்தரவேலு மனைவி பூங்கொடியையும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்வது தெரிய வந்துள்ளது. இந்தக் கொலையினால் அந்த கிராமமும் அவர்களது உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com