மரியா கொரினா மச்சாடாவின் அரசியல் வாழ்க்கை
மரியா கொரினா மச்சோடா 1967ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பிறந்தார். கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த தனியார் பள்ளியில் கல்விபெற்றவர். பொறியாளராக உருவானார்.
இவரது குடும்பம் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததால், மனித உரிமை செயல்பாடுகளை மேற்கொண்டார்.
1999 முதல் 2025 வரை 25 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் வெனிசுலாவின் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளார் மரியா. 2000ம் ஆண்டு முதல் 2010 வரை தேர்தல் அரசியலில் ஈடுபடாவிடாலும், 2002ம் ஆண்டு அலெஜான்ட்ரோ பிளாஸ் என்பவருடன் இணைந்து Súmate என்ற அமைப்பை உருவாக்கி, ஜனநாயகம் மற்றும் தேர்தல் வெளிப்படைத்தன்மைக்காகப் பணியாற்றினார்.
அதன்பிறகு 2010ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று 2011-2014 வரை நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். அதன்பிறகு அரசின் தடுப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் மிகக் குறைவாகவே பொதுவெளியில் தோன்றினார்.
குறிப்பாக 2024ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் பிராசரம் செய்ய பல தடைகளை விதித்தது வெனிசுலா அரசு. பாதுகாப்பு காரணங்களுக்காக அறிவிக்கப்படாத இடங்களில் பிராசரம் செய்தார் மச்சோடா. அரசு ஊடகங்கள் அவரது பிரசாரத்தை காட்டவில்லை, தனியார் ஊடகங்களும் அழுத்தம் காரணமாக மிகக் குறைவாகவே காட்டின. பெரும்பாலும் சமூக வலைத்தளங்களையும் இணையத்தையும் நம்பி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மச்சோடா தேர்தலில் நிச்சயமாக நிக்கோலஸ் மதுரோவை வெற்றி பெறுவார் என எண்ணப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் அவர் தேர்தலில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.