அமெரிக்காவின் பலவீனத்தில் குறி வைக்கும் சீனா – அரிய தாது விஷயத்தில் என்ன நடக்கிறது?

Share

சீனா, அமெரிக்கா, அரிய தாதுக்கள், ஏற்றுமதி, தொழில்துறை

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், ஆஸ்மண்ட் சியா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த வாரம், சீனாவின் வர்த்தக அமைச்சகம் ‘2025-ஆம் ஆண்டின் அறிவிப்பு எண். 62’ என்ற பெயரில் ஒரு ஆவணத்தை வெளியிட்டது.

ஆனால் இது வெறும் அதிகாரப்பூர்வ செய்தி மட்டுமல்ல. அமெரிக்காவுடன் சீனா செய்து கொண்டுள்ள வரி ஒப்பந்தத்தையே இது உலுக்கியுள்ளது.

இந்த அறிவிப்பு, சீனாவின் அரிய தாதுக்கள் ஏற்றுமதியில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை விரிவாக எடுத்துரைத்துள்ளது. இது அரிய தாதுக்களின் உலகளாவிய விநியோகத்தில், சீனாவின் பிடியை இறுக்கும் ஒரு நடவடிக்கையாகும். அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் சீனா எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பதையும் இந்தச் செய்தி டொனால்ட் டிரம்பிற்கு நினைவூட்டியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்தின் உற்பத்திக்கும் இன்றியமையாததாக இருக்கும் அரிய தாதுக்களை எடுப்பதில் சீனா கிட்டத்தட்ட ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com