சூடாக சாதம் போட்டு அதில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு கொதிக்கும் புளிக்குழம்பை ஊற்றி புரட்டி அதோடு பொரித்த அப்பளம் ஒன்றை நொறுக்கி கலந்து சாப்பிட்டால் அப்படி இருக்கும். அதற்கு முன்னர் எந்த பீசா பர்கரும் நிற்காது. அதே போல பாயசம் – அப்பளம் காம்பினேஷும் அடித்துக்கொள்ள முடியாது.
ஆனால் எப்போதும் அப்பளத்தை பொறித்து மட்டுமே சாப்பிட்டு பழகியிருப்போம். ஆனால் அப்பளத்தை வைத்து ஒரு சுவையான ஸ்னாக்ஸ் செய்ய முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? உண்மை தான். மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து க்கொடுக்கலாம் என்று யோசிக்கும் பொது பலம் இருந்தால் இதை செய்து பாருங்க..
வெஜ் ரோல்களை கடையில் வாங்கி சாப்பிட்டுருப்போம். கோதுமை மாவு அல்லது மைதாவில் சப்பாத்தி மாதிரி செய்து அதன் உள்ளே காய்கறி, கரி, பன்னீர் போன்றவற்றை வைத்து சுற்றி பொறித்திருப்பார்கள். அதில் ஒரு சின்ன மாறுதல் செய்து அலப்பலத்தை வைத்து ரோல் செய்யும் முறையை தான் கற்றுக்கொருக்க இருக்கிறோம்.
ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டை லேசாக வதக்கவும். அதன் பின்னர், குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பும் கேரட், குடைமிளகாய், பட்டாணியை சேர்த்து வதக்கவும். சிக்கன் போடா விரும்பினால் அதை போட்டு வேகவைக்கவும்.
பின்னர் சுவை கூட்ட சோயா சாஸ், மிளகு தூள், தக்காளி கெட்ச்அப் மற்றும் உப்பு சேர்க்கவும். விருப்பம் இருந்தால் தனியாக முட்டையை பொரியல் மாதிரி செய்தோ ஆம்லெட் வடிவத்திலோ சித்து சேர்த்துக்கொள்ளலாம். அதிக நேரம் சமைக்க வேண்டாம். காய்கறிகள் மொறுமொறுப்பு போய்விடும்.

பின்னர் அதை ஒரு தட்டில் மாற்றி ஆறவைக்கவும். பக்கத்தில் ஒரு சிறிய கிண்ணத்தில் கடலை மாவுடன் 2 டீஸ்பூன் தண்ணீர் கலந்து கெட்டியான பேஸ்ட்டை செய்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அப்பளத்தை எடுத்து தண்ணீரில் சில நொடிகள் நனைத்து அதை வடித்துக்கொள்ளவும். பின்னர் செய்து வைத்து கலவையை உள்ளே வைத்து ஓரங்களை மாவு பேஸ்ட் வைத்து ஒட்டவும்.
இதையும் பாருங்க: உலகம் முழுவதும் உள்ள இந்த 10 வினோதமான உணவுகளை பற்றி கேள்விப்பட்டதுண்டா?
கடாயில் எண்ணெயை சூடாக்கி அப்பள ரோல்களை பொரித்து எடுத்தால் சுவையான ஸ்னாக்ஸ் தயார். அதிகமாக வறுக்க வேண்டாம். மிதமான தீயில் பொன்னிறம் ஆகும்வரை பொரித்தால் போதும். இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகொண்ட பூண்டு சட்னி செய்து அதோடு சாப்பிட்டு பாருங்க.. முக்கியமாக குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். ருசித்து பாருங்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.