அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்துக்கு யுவராஜ் சிங் உதவியது எப்படி? நெகிழும் தந்தை

Share

ராஜ்குமார் சர்மா, ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராகப் புயலாய் விளையாடிய அபிஷேக் சர்மாவின் தந்தை மட்டுமல்ல, அவருடைய பயிற்சியாளரும் கூட. போராட்டப் பயணத்தில் மகனுடன் சேர்ந்து நடந்தவர் இன்று அவரது வெற்றியை நேரில் கண்டு மகிழ்கிறார்.

பட மூலாதாரம், RAJ KUMAR SHARMA

படக்குறிப்பு, ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அபிஷேக் சர்மா அபாரமான இன்னிங்ஸை விளையாடினார்.

“நான் முதல் தர கிரிக்கெட் விளையாடினேன். என் சக வீரர்கள் பலரும் இந்தியா அணியில் விளையாடினர், ஆனால் என்னால் முடியவில்லை என்று எப்போதும் என் அம்மாவிடம் சொல்வேன். ஏன் முடியவில்லை என எனக்குத் தெரியாது, ஒருவேளை அது கடவுளின் விருப்பம். அதற்கு என் அம்மா, ‘மகனே, கவலைப்படாதே, நீ விளையாடவில்லை என்றாலும், உன் மகன் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவான்’ என்று சொல்வார்.”

அந்த தருணத்தை நினைக்கும் போது ராஜ்குமார் சர்மா உணர்ச்சிவசப்படுகிறார். காரணம் என்ன தெரியுமா? அவரது அம்மா சொன்ன வார்த்தைகள் இன்று நிஜமாகி விட்டன.

“இது எனக்கு மிகுந்த பெருமையூட்டும் தருணம். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தை தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும், அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் உச்சம் அடைய வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். எங்கள் மகன் பல ஆண்டுகளுக்கு முன் பேட்டைக் கையில் எடுத்தான். போராடினான், கடுமையாக உழைத்தான். இன்று அவன் இந்தியாவுக்காக விளையாடுவதோடு மட்டுமின்றி போட்டிகளையும் வென்று கொண்டிருக்கிறான். இதைப் பார்க்கும் போது என் மனம் நெகிழ்கிறது”என்கிறார் ராஜ்குமார் சர்மா.

ராஜ்குமார் சர்மா, ஆசியக் கோப்பையில் புயலாய் விளையாடிக் கொண்டிருக்கும் அபிஷேக் சர்மாவின் தந்தை மட்டுமல்ல, அவருடைய பயிற்சியாளரும் கூட.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com