‘ராமதாஸ் புகார்…’
இந்நிலையில்தான் ‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ என்ற கோஷத்தோடு அன்புமணி நடத்தவிருந்த 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என ராமதாஸ் தமிழக டிஜிபியிடம் மனு கொடுத்திருந்தார். இந்த நடைபயணத்தால் வட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ராமதாஸ் அளித்த மனுவை தொடர்ந்து இப்போது அன்புமணியின் நடைபயணத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். திருப்போரூர் கந்தசாமி கோவிலில் வழிபட்டுவிட்டு இன்றுதான் அன்புமணி தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கியிருந்தார்.
‘அனுமதி மறுப்பு…’

100 வது நாளில் தர்மபுரியில் நடைபயணத்தை முடிப்பதுதான் திட்டம். இந்நிலையில்தான் இப்போது அன்புமணியின் இந்த நடைபயணத்துக்கு எந்த மாவட்ட எஸ்.பியும் அனுமதி வழங்கக்கூடாதென தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருக்கிறார்.