அன்னெட் ஹெர்ஃப்கென்ஸ்: விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே பெண் – 8 நாட்கள் காட்டில் நடந்த அதிசய போராட்டம்

Share

வெடித்துச் சிதறிய விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பெண்

பட மூலாதாரம், Courtesy of Annette Herfkens

படக்குறிப்பு, 1992, வியட்நாமில் நடந்த விமான விபத்தில் உயிர் பிழைத்த அன்னெட் ஹெர்ஃப்கென்ஸ்.

டச்சு பெண்ணாகிய அன்னெட் ஹெர்ஃப்கென்ஸ், தனக்கு கணவராக நிச்சயிக்கப்பட்டிருந்தவரோடு வியட்நாம் நாட்டிலிருக்கும் ஒரு எழில் நிறைந்த கடற்கரை ரிசார்ட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அது 1992-ம் ஆண்டு. அன்னெட் ஸ்பெயினில் நிதித் துறையில் பணிபுரிந்து வந்தார். வில்லெம் அல்லது பாஸ்ஜே (அப்படிதான் அன்னெட் அவரை அழைத்தார்) என்றழைக்கப்பட்டவரோடு காதலுற்றிருந்தார். அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தார்கள். பாஸ்ஜேவும் அன்னெட்டும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தவர்கள்.

அவர்கள் பயணித்த சிறிய விமானம் நா டாங் விமான நிலையத்தை நெருங்கியபோது, திடீரென்று கீழே விழுவதை உணர்ந்தனர்.

“என்ஜின்கள் சத்தமிட்டன. பயணிகள் அலறுகிறார்கள். அவர் என்னைப் பார்த்தார். நான் அவரைப் பார்த்தேன். நாங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டோம், பின்னர் எல்லாம் இருண்டுவிட்டது, “என்று அன்னெட் பிபிசியின் லைவ்ஸ் லெஸ் ஆர்டினரி போட்காஸ்டில் விவரித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com